Left Logo

සමෘද්ධි සංවර්ධන දෙපාර්තමේන්තුව சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் Department of Samurdhi Development

Right Logo

Department of Samurdhi Development

சமுர்த்தி நுண்நிதி நிகழ்ச்சித்திட்டம்

சமுர்த்தி நுண்நிதி நிகழ்ச்சித்திட்டம்

சமுர்த்தி நுண்நிதி நிகழ்ச்சித்திட்டம்

அறிமுகம்

1995 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க இலங்கை சமுர்த்தி அதிகார சபைச். சட்டத்தின் பிரகாரம் சமுர்த்தி தேசிய வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 1996 ஆம் ஆண்டில் வங்கிசட சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் குறைந்த வருமானம் பெறுவோரின் சேமிப்பினை விருத்தி செய்து, அதனூடாக முதலீட்டு பலத்தினை அதிகரிப்பதற்கும், உற்பத்தி மற்றும் சேவைகளின் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனத்தை (கடன் வசதிகள்) வழங்குவதற்கும், முறையற்ற கடன் கொடுக்கல் வாங்கல்களை குறைப்பதற்கும் அதனூடாக அவர்களை கடன் சுமையிலிருந்து மீட்டெடுத்து இலாபகரமான நிறுவன கட்டமைப்பொன்றினை உருவாக்கும் நோக்கத்துடன் தலைமைக் காரியாலயத்தில் குறுநிதிப் பிரிவு/மகா சங்கம், பிரதேச மட்டத்தில் 335 சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கங்கள் மற்றும் வலய மட்டத்தில் 1097 சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளும் செயற்படுகின்றது.

2013 ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க வாழ்வின் எழுச்சி சட்டத்தின் 33(1),33(2),33(9) பிரிவுகளின் பிரகாரம் வங்கி மற்றும் வங்கிச் சங்கங்களின் கண்காணிப்பு ஒழுங்கமைப்பின் பொருட்டு எட்டுப் பேரைக் கொண்ட முகாமைத்துவ சபை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த முகாமைத்துவ சபையினால் வங்கி மற்றும் வங்கி சங்கங்களுக்கு காலத்துக்கு காலம் கட்டளைகள் வழங்கப்படுகின்றது.

நோக்கங்கள்

1.         வங்கி வலையமைப்பின் பொருட்டு புதிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் அதற்குத் தேவையான சுற்றறிக்கைகள் மற்றும் நெறிப்படுத்தல் கட்டளைகளை வெளியிடுவதும்.        

2.         பிற நெறிப்படுத்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல்.                                                                 

3.         வைப்புக்கள் மேம்பாட்டு வேலைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் அதற்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல்.                                   

4.         வங்கி நிதியத்தினை முதலீடு செய்வதும் பிரதேச மட்டத்தில் ஆலோசனைகளை வழங்குவதும்.  

5.         குறு நிதிக் காப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.                                    

6.         சகல வங்கிகள் மட்டத்தில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு அது தொடர்பான ஆலோசனைகளை வழங்குதல்                                                          

7.         சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி மற்றும் வங்கிச் சங்கங்களில் இறுதி கணக்குகளின் பொருட்டு வழங்கப்படுகின்ற கணக்காய்வு அறிக்கைகளின் பிரகாரம் இறுதிக் கணக்குகளை உறுதிப்படுத்துவதும் இலாபப் பகிர்வின் பொருட்டு கட்டளைகளை வழங்குவதும்.            

8.         வங்கிகளின் பொருட்டு மீள் நிதியீட்டல் கடன் வசதிகளை வழங்கி கடன் பகுப்பாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.                                                       

9.         சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி மற்றும் வங்கிச் சங்கங்களின் பொருட்டு காணிகளை சுவிகரித்துக் கொள்ளல்ஃகொள்வனவு நடவடிக்கைகள் மற்றும் வங்கிக் கட்டிட நிர்மாணங்களுக்கு நிதியங்களை வழங்குவதும் சொத்து முகாமைத்துவமும்.                  

10.       சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி மற்றும் வங்கிச் சங்க முகாமைத்துவ சபையினை கூட்டுவதற்கு ஒத்துழைப்பது, முகாமைத்துவ சபை படிவங்களை சமர்ப்பிப்பதும் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதும்.

11.       சகல சமுதாய அடிப்படை வங்கி மற்றும் வங்கிச் சங்கங்களின் முன்னேற்றம், நெறிப்படுத்தல், பின் பணி ஆய்வுகளை மேற்கொள்ளல்.                              

12.       சமுர்த்தி பபனாளிகளை சமுதாய அடிப்படை வங்கிகள் ஊடாக அங்கீகரித்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளூடாக மேற்கொள்ளப்படுகின்ற கருத்திட்டங்களோடு ஒருங்கிணைப்பு செய்தல்.                                                                          

13.       வாழ்வாதார மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளால் செயற்படுத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களின் பொருட்டு சமுதாய அடிப்படை வங்கி மற்றும் வங்கி சங்கங்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.          

14.       சமுர்த்தி சட்டத்தின் பிரகாரம் (34ஆவது பிரிவு) தாபிக்கப்பட்ட வங்கி தொழிற்சங்க சமாசத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல்.                                            

15.       சமுர்த்தி வங்கி, சமுர்த்தி வங்கிச் சங்கங்கள் மற்றும் தொழிற்சமாசம் மற்றும் குறுநிதிப் பிரிவினை கணினி மயமாக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.                                             

16.       சமுர்த்தி வங்கிகளின், சமுர்த்தி வங்கிச் சங்கங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் மக்கள் தலைவர்களை பயிற்றுவிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

17.       வறிய மக்களை வலுவூட்டும் வேலை திட்டத்தின் பொருட்டு தேவையான நிதி ஒத்துழைப்பினை வழங்குவதற்கு வேலை திட்டங்களை அறிமுகப்படுத்துதல்.

வங்கி வைப்பு வேலைத்திட்டம்

•          அங்கத்துவம் சேமிப்பு

•          அங்கத்தவரல்லாதோர் சேமிப்பு

•          கூட்டு சேமிப்பு

•          சிறுவர சேமிப்பு;

•          திரியமாத சேமிப்பு

•          சிசுரக்க சேமிப்பு

•          தனசக்தி சேமிப்பு

சமுதாய அடிப்படை வங்கி கடன் வேலை திட்டம்.

•          சமுர்த்திப் பயனாளிகள் உட்பட குறைந்த வருமானம் பெறுவோரின் தொழில் முயற்சி ஆற்றல்களை இனம் கண்டு சுய பலத்துடன் வறுமை நிலையில் இருந்து மீளுவதற்கு தேவையான சூழலைக் கட்டி எழுப்புவதற்குத் தேவைப்படும் நிதியியல் வசதிகளை வழங்குவது சமுதாய அடிப்படை வங்கி கடன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.

•          அங்கத்தவர்களின் மூலதன நிதியம் மற்றும் துரித நிதித் தேவையினை தீர்க்கும் பொருட்டு விசேட கடன் வேலைத் திட்டங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.

•          வருமானமீட்டல் கருத்திட்டங்களின் பொருட்டு ரூபாய் 25,000ஃஸ்ரீ திலிருந்து ரூபாய் 2,000,000ஃஸ்ரீ வரையிலான பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் சமுர்த்தி வங்கிகள் ஊடாக கடன்கள் வழங்கப்படுகின்றது. அதற்கமைய வாழ்வாதார அபிவிருத்தி பயிர்ச்செய்கை, தொழில் பயிற்சி போன்ற துறைகளின் பொருட்டு மற்றும் அவசர கடன் தேவைகளுக்காகவும் கடன்கள் வழங்கப்படுகின்றது.

•          வீடமைப்பு, நுகர்வு, இடர் போன்ற தேவைகளுக்கும் வங்கிக் கடன் வசதிகள் செயற்படுகின்றது. இதன் பொருட்டு ரூபாய் 25இ000ஃஸ்ரீ இலிருந்து ஆகக்கூடியது ரூபா 500,000ஃஸ்ரீ வரை கடன் வழங்கப்படுகின்றது.

•          சமூர்த்தி வங்கி கடன் வேலை திட்டத்தின் மூலம் வெற்றிகரமடைந்துள்ள தொழில் முயற்சியாளர்களின் நிதி மூலதனத் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு ரூபா 2,000,000ஃஸ்ரீ ரூபா 5,000,000ஃஸ்ரீ வரை கடன் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச் சங்கங்கள் ஊடாக இசுர மற்றும் புதிய சமுர்த்தி தொழில் முயற்சியான்மை கடன் திட்டத்தின் கீழ் கடன்கள் வழங்கப்படுகின்றது.

•          அவசர நிதித் தேவைகளின் போது அநியாய வட்டிகாரர்களின் பிடியிலிருந்து விலகி மிக இலகுவாக நிதித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு நுகர்வு, இடர், சுய சக்தி, சமுர்த்தி அருணலு, சமுர்த்தி மிதுரு கடன் திட்டங்களின் ஊடாக அங்கத்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

கடன் வகை

1

பயிர்ச்செய்கை

2

நுகர்வு

3

சுயசக்தி

4

இடர்

5

 வாழ்வாதார சுழற்சி

6

வாழ்வாதார அபிவிருத்தி

7

சமுர்த்தி சம்பத்த

8

அவசர வர்த்தகக் கடன்

9

திவிநெகும அருணலு

10

ரண் பிரதீப

11

ஊழியர் நுகர்வுக்கடன்

12

சஹன பியவர

13

சமுர்த்தி அபிமான

14

பண்டிகை முற்பணக் கடன்

15

புதிய சமுர்த்தி தொழில் முயற்சியாளர்; மையக் கடன்

16

சமுர்த்தி மித்துரு கடன்

17

சமுர்த்தி சியபத்த கடன்

18

இளம் தொழில் முயற்சியாளர் மையக் கடன்

19

சமுர்த்தி லக்ஜய கடன்

20

சமுர்த்தி லக் வசனக் கடன்

21

சமுர்த்தி லக்சார கடன்

 

குறு நிதிப் பிரிவின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்ற மேம்பாட்டு வேலைத் திட்டங்கள்.

2000 ஆம் ஆண்டிலிருந்து சுயநிதி அலகு ஒன்றாக பிரிவிலிருந்து ஈட்டிக்கொண்ட வருமானத்தின் ஊடாக பல்வேறு வேலைத் திட்டங்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி வலையமைப்பின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் மக்களை இலக்காக்கிக் கொண்டு மேற்கொள்வது குறுநிதி பிரிவின் முக்கிய குறிக்கோளாகும். இதற்காக பிரிவிற்குள் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேலைத் திட்டங்கள் கீழுள்ளவாறாகும்.

•                  புத்தாண்டு சேமிப்பு மேம்பாட்டு வேலை திட்டம்.

வங்கிகளோடு தொடர்புபட்டுள்ள கணக்குடையோர் மற்றும் ஏனைய மக்களின் பொருட்டு ஒவ்வொரு வருடமும் தமிழ் சிங்கள புத்தாண்டு வைபவத்தோடு இணைந்தாக சமுர்த்தி வங்கிகள் மூலம் சேமிப்பு மேம்பாட்டு வேலைத் திட்டங்கள் மற்றும் புத்தாண்டு வைப்பும், கிராமிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் வழங்கி 1097 சமுர்த்தி வங்கிகள் பூராகவும் ஒரே நாளில் வெற்றிகரமாக செயல்படுத்தி சமுர்த்தி வங்கியின் பெயர் மற்றும் சேவைகள் தொடர்பில் மக்களுக்கு ஒரு செய்தியை எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அக்காலத்திற்குள் வைப்பிலிடப்பட்ட பணத்திற்காக வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள மற்றும் கூடிய பெறுமதியுள்ள பரிசுகளும் வழங்கப்பட்டது. இதனூடாக குறித்த வலயத்திற்குள் மக்கள் ஒன்று கூடுவதும் மக்களது கலாச்சார உணர்வுகளை மெருகூட்டுவதற்கும் இதனை ஒரு சந்தர்ப்பமாக ஆக்கிக் கொள்ள முடியுமாக இருந்தது. மேலும் சமுர்த்தி வங்கி நடவடிக்கைகளை மற்றும் நம்பிக்கையினை உறுதிப்படுத்தி குறைந்த வருமானம் பெறுவோர் உட்பட மக்களிடையே சமுர்த்தி வங்கியின் பெயரை பிரபல்யப்படுத்தி அவர்களை பொருளாதாரஃசமூக ரீதியாக வலுவூட்டுவதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

•                  “ரன் பிரதீபதங்க அடகுக் கடன் சேவை.

சமுர்த்தி வங்கி அங்கத்தவர்களால் அவசர நிதித் தேவைக்காக தன்னிடம் உள்ள தங்கத்திலான பொருட்களை அடகு வைத்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் போது ஏற்படுகின்ற சிரமங்களை போக்கிக் கொண்டு சலுகை வட்டி அடிப்படையில் துரிதமாக பணத்தேவையினை பூர்த்தி செய்து கொள்வதற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

•                  சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி சார்ந்த அருணலு துரித கடன”; வேலை திட்டம்.

சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் மூலம் அருணலு துரித கடன் வேலைத் திட்டம் அறிமுகப்படுத்துவது நாடு பூராகவும் சகல சமுதாய அடிப்படை அமைப்புகள் ஊடாக அங்கத்தவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்றது சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்களால் அவர்களது அவசர நிதித் தேவைக்காக முறையற்ற நுண்நிதி நிறுவனங்கள்ஃநபர்கள் ஊடாக கூடிய வட்டி வீதத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளின் அடிப்படையிலும் பெற்றுக்கொள்ளப்படுகின்ற கடனின் பொருட்டான மாற்றீடு ஒன்றாக சலுகை மற்றும் குறுகிய கால கடன் தொகையினை பெற்றுக்கொள்ள வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

•                  பயிற்சி நடவடிக்கைகள்.

1,097 சமுதாய அடிப்படை வங்கி வலையமைப்புகள் மற்றும் 335 சமுதாய அடிப்படை வங்கி சங்கங்களில் பணியாற்றும் பணியாளர் குழாமினருக்கு வங்கி நடவடிக்கைகள் மற்றும் பிற விடயங்களுக்குரிய பயிற்சிகளை வழங்குவது சமுதாய அடிப்படை வங்கி நிதியத்தின் மூலம் திணைக்களத்தின் பயிற்சி பிரிவின் ஒருங்கிணைப்பின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

வாடிக்கையாளர்களான மக்களுக்கு மிக வினைத்திறன் மற்றும் பயனுறுதி வாய்ந்த சேவை ஒன்றினை வழங்கும் பொருட்டு வங்கிப் பணியாளர்களுக்கு அறிவு, திறன் மற்றும் சிறந்த மனப்பாங்கினை மேம்படுத்துவது இந்த அலகின் பணிப் பொறுப்பாகும்.

அதன் பிரகாரம் வங்கியின் நடவடிக்கைகள் தொடர்பில் வழங்கப்படுகின்ற வங்கி நடவடிக்கைகள் மற்றும் கணக்கீட்டுச் செயற்பாடுகள் தொடர்பான ஆரம்ப பயிற்சிப் பாடநெறி ஒவ்வொரு வங்கி   உத்தியோகத்தருக்கும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கு மேலஅதிகமாக சமுதாய அடிப்படை வங்கி நடவடிக்கைகள் மற்றும் வங்கிச் சங்கத்தின் கணக்கீட்டு நடவடிக்கைகள் தொடர்பான பயிற்றப்படாத சமுதாய அடிப்படை வங்கிஃவங்கிச் சங்க பணியாளர் குழாமினருக்கு பயிற்சிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

•                  முகாமைத்துவ தகவல் அலகு.

1,097 சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளின் தகவல்களை முகாமைத்துவம் செய்வது குறுநிதிப் பிரிவின் முகாமைத்துவ தகவல் அலகின் மூலமாகும். அதன் பிரகாரம் ஒவ்வொரு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி மற்றும் சமுதாய அடிப்படை வங்கிச் சங்கமும் மாதாந்தம் தனது வங்கியின் முன்னேற்றத்தினை வழங்கப்பட்டுள்ள படிவத்தின் மூலம் தகவல் முகாமைத்து அலகிற்கு அறிக்கையிடல் வேண்டியதுடன் அத்தகவல்களை தயாரித்து சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளில் உள்ள நிலையினை பகுப்பாய்வு செய்து தகவல்களை சமர்ப்பிப்பதும், சமர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளின் முன்னேற்றத்தினை மதிப்பீடு செய்யும் பொருட்டு தேவையான      விகிதாசார பகுப்பாய் ஒன்றினை கட்டி எழுப்புவதும், அதற்கமைய சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளை மதிப்பீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும் கணினி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்திக் கொண்டு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி மற்றும் வங்கிச் சங்கங்களின் தகவல்களை குறுநிதிப் பிரவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளை கணினிமயப்படுத்தும் நடவடிக்கைகள் வெற்றிகரமடைந்தவுடன் இந்த அலகின் மூலம் மேலும் பயனுறுதி வாய்ந்த மற்றும் வினைத்திறன் மிக்க விதத்தில் சமுதாய அடிப்படை வங்கிகளில் உள்ள நிலையினை பகுப்பாய்வு செய்து மற்றும் மதிப்பீட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மொத்த சமுர்த்தி வங்கி வலையமைப்பையும் நிரந்தரமான நிதி அலகொன்றாக உருவாக்கும் நோக்கத்துடனும் ஊழியர் ஊக்குவிப்பின் எதிர்பார்ப்புடன் வங்கிகளை தரப்படுத்துதல் மற்றும் பாராட்டும் வேலைத் திட்டம் ஒன்றினை செயல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வேலைத்திட்டமானது ஒவ்வொரு வருடமும் மேம்படுத்திக் கொண்டு நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

×